வெளியிடப்பட்ட நேரம்: 01:02 (27/05/2017)

கடைசி தொடர்பு:01:00 (27/05/2017)

சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு ரிசல்ட்; மே 28-ம் தேதி வெளிவருகிறது 

கருணை மதிப்பெண் விவகாரத்தில் சி.பி.எஸ்.இ முடிவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அதனால் 12-ம் வகுப்பு ரிசல்ட் வெளியிடுவதில் காலம் தாமதம் ஆனது. இந்த வழக்கில், `தேர்வில் கேட்கப்படும் கடினமான வினாக்களுக்கு வழங்கப்பட்டு வரும் கருணை மதிப்பெண்களை ரத்து செய்வது நியாயமற்ற செயல். இந்த ஆண்டும் மாணவர்களுக்கு வழக்கம் போல கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும்' என்று நீதிபதி உத்தரவிட்டார். 

சி.பி.எஸ்.இ


இந்நிலையில் சி.பி.எஸ்.இ கூறியிருப்பதாவது, 'சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 28-ம் தேதி வெளியிடப்படுகின்றன. cbse.nic.in என்ற இணையதளத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள் பிளஸ் 2 சி.பி.எஸ்.இ தேர்வை எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க