வெளியிடப்பட்ட நேரம்: 02:41 (27/05/2017)

கடைசி தொடர்பு:02:41 (27/05/2017)

இன்று சென்னையில் சிறந்த எம்.பி-க்களுக்கு ''சன்சத் ரத்னா விருது 2017''

சிறந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ‘சன்சத் ரத்னா’ விருது வழங்கும் விழா கடந்த 2010-ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் சென்னையில் நடந்து வருகிறது. நடப்பு ஆண்டுக்கான விருது வழங்கும் விழா இன்று சென்னை ஐ.ஐ.டி-யில் நடக்கிறது. காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த விழா, மாலை 6 மணிக்கு முடிவடைகிறது.

விருது


ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பின்னர் தொகுக்கப்படும் புள்ளி விவரங்களின்படி விருதுகளுக்கு உரியோர் தேர்வு செய்யப்படுகின்றனர். 'சன்சத் ரத்னா விருது' முதன்முறையாக வழங்கும் போது டெல்லியில் இருந்தபடி அப்துல்கலாம் டெலிகான்பிரன்ஸ் மூலம் பேசினார். சென்னையில் இன்று நடக்கும் விழாவில், ‘சன்சத் ரத்னா- 2017’ விருதுகளை, கேரள மாநில ஆளுநர் சதாசிவம் வழங்குகிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க