வெளியிடப்பட்ட நேரம்: 16:35 (27/05/2017)

கடைசி தொடர்பு:10:15 (29/05/2017)

மொரிஷியஸ்-க்கு எத்தனை கோடிகள்..?: பிரதமர் மோடியின் புதிய ஒப்பந்தம்!

மொரிஷியஸ் நாட்டுக்கு இந்தியா, 500 மில்லியன் டாலர்கள் கடல் வழி பாதுகாப்புக்காக அளிப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்தியா- மொரிஷியஸ்


அரசு முறைப் பயணமாக நேற்று இந்தியா வந்தார் மொரிஷியஸ் பிரதமர் பிரவீந்த் ஜூக்நாத். மூன்று நாள்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

மொரிஷியஸ் நாட்டின் கடல்வழி பாதுகாப்புக்காக இந்தியா 500 மில்லியன் டாலர்கள் அளிப்பதாக பிரதமர் மோடி தலைமையில் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தங்கள் மற்றும் பங்களிப்புகள் இரு நாட்டு உறவையும் வலுப்படுத்தும் என இருநாட்டு பிரதமர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும், இருநாட்டு பொருளதார சூழல்களையும் மேம்படுத்திக் கொள்வதற்காக இந்தியா-மொரிஷியஸ் இடையே வணிகம் மற்றும் முதலீடுகள் குறித்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன. 

மொரிஷியஸ் பிரதமர் வருகை குறித்து பிரதமர் மோடி கூறும்போது: ‘தன் முதல் வெளிநாட்டு பயணத்துக்காக இந்தியாவைத் தேர்ந்தெடுத்த மொரிஷியஸ் பிரதமருக்கு எனது நன்றிகள். இருநாட்டு கடலோரப் பாதுகாப்புக்கும் இணைந்து செயல்படுவோம். மொரிஷியஸுக்கு உதவ 500 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

மொரிஷியஸ் பிரதமர் பிரவீந்த் ஜூக்நாத் கூறும்போது, ‘இந்திய-மொரிஷியஸ் உறவு முன்னர் இருந்ததைவிட தற்போது மேலும் வலுவாகியுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் இரு நாட்டு பாதுகாப்பு அம்சங்களையும் மேம்படுத்தும். மொரிஷியஸும் எப்போதும் இந்தியாவுக்கு துணைபுரியும்’ என்றார்.