இந்தியாவின் நீளமான பாலத்தின் பெயர் தெரியுமா..?

பிரதமர் மோடி நேற்று திறந்துவைத்த இந்தியாவின் மிகவும் நீளமான பாலத்துக்கு அசாமின் பிரபல பாடகர் பூபென் ஹசாரிகாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நீளமான பாலம்

அஸ்ஸாம் மாநிலம் கௌகாத்தியிலுள்ள சாதியா என்ற இடத்திலிருந்து அருணாச்சலப்பிரதேசத்தின் இட்டாநகரிலுள்ள தோலா இடையே பிரம்மபுத்திரா, லோஹித் ஆறுகளின் குறுக்கே சுமார் 9.2 கி.மீ தொலைவில் கட்டப்பட்டுள்ள பாலத்தைப் பிரதமர் மோடி நேற்று திறந்துவைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பூபென் ஹசாரிகா


அசாமின் பிரபல கவிஞரும், முன்னணிப் பாடகருமான மறைந்த பூபென் ஹசாரிகாவின் நினைவாக இந்தியாவின் மிக நீளமான பாலத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஹசாரிகா இந்தி மற்றும் அசாம் மொழி இசையில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அசாமில், சடியா என்ற இடத்தில், 1926, செப்., 8 ஆம் தேதி பிறந்தவர் 2011, மார்ச் 4 ஆம் தேதி மறைந்தார்.


தன் குரலால் பலரையும் வசீகரித்த ஹசாரிக்காவை கவுரவப்படுத்தும் வகையில் கவுகாத்தியில் அவருக்கு சிலை ஒன்று நிறுவப்பட்டது. அந்தச் சிலையினை அவரே திறந்து வைத்து சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!