நீர் வழிப் பாதை மேம்பாடு 2000 கோடி ரூபாய் ஒதுக்கீடு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்தியக் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சகம் மற்றும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஆகியவை இணைந்து, மத்திய சாலை நிதியிலிருந்து 2.5 சதவிகித நிதியை தேசிய நீர்வழிகளுக்கு வழங்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதற்காக வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய சாலை நிதி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

நீர்

இந்த நிதி, தேசிய நீர்வழிகளை பராமரிப்பதற்கான நிதிக்காகவும், தேசிய நெடுஞ்சாலைகள் வளர்ச்சிக்கு வழங்கப்படும் நிதியின் அளவை குறைப்பதற்காகவும் வைக்கப்பட்டது. தேசிய நீர்வழி திட்டங்களைச் செயல்படுத்துகையில் தனியார் அரசு கூட்டுத் திட்டங்களாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், தனியார் முதலீடு இல்லாத நேரங்களில் மட்டுமே அரசு நிதி பயன்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சரவை உத்தரவு பிறப்பித்தது. தற்போது மத்திய சாலை நிதிக்கு வரும் வருவாயை வைத்து கணக்கிட்டால், அதிலிருந்து ஒதுக்கப்படும் 2.5 சதவிகித நிதியானது 2,000 கோடி ரூபாயாக இருக்கும். இது தேசிய நீர்வழிப் பாதைகளை பராமரிக்க பயன்படும். 2022-23ஆம் ஆண்டு வரையில் புதிய நீர்வழிப் பாதைத் திட்டங்களை கண்டறிந்து செயல்படுத்த 25,000 கோடி நிதி தேவைப்படும் என்று உள்ளுர் நீர்வழிப் பாதைகள் ஆணையம் கணித்துள்ளது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!