Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆதித்யநாத் வருகைக்காக, சோப்பு கொடுத்து மக்களை குளிக்கச் சொன்ன அதிகாரிகள்!

உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகர் அருகில்,  மெயின்பூர்கோட் என்ற பகுதி உள்ளது. அங்கு முஷார் என்னும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அங்குள்ள மக்களைச் சந்திப்பதற்காக, கடந்த சில நாள்களுக்கு முன் அந்த கிராமத்துக்குச் சென்றார்.

Yogi Aditayanath, Dalit Village


இதற்கிடையே, ஆதித்யநாத் அங்கு பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, இதில் கலந்து கொள்ளும்போது, மக்கள் சுத்தமாக வரவேண்டும் என்று கூறி, அம்மக்களுக்கு சோப்பு, ஷாம்பு ஆகியவற்றை அரசு அதிகாரிகள் கொடுத்துள்ளனர். மேலும், வாசனைத் திரவியங்களையும், அரசு அதிகாரிகள் வழங்கியுள்னர்.


இதுதவிர, சாலையை சீரமைப்பது, குப்பைகள் அகற்றுவது, வீடுகளில் கழிவறை கட்டித் தருவது, சாக்கடைகளை தூய்மை செய்வது என, அதிகாரிகள் பல்வேறு டிராமாக்களை அரங்கேற்றியுள்ளனர். இந்தச் சம்பவம் அங்கு சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதில் ஹைலைட் என்னவென்றால், அந்த நிகழ்ச்சியில் அரை மணி நேரம் கூட ஆதித்யநாத் கலந்து கொள்ளவில்லை. 


பாகிஸ்தான் ராணுவத்தினரால் கொல்லப்பட்ட பிரேம் சாகர் என்ற ராணுவ வீரர் இல்லத்துக்கு, ஆதித்யநாத் சென்றபோது, ஏ.சி, தரை விரிப்பு, சோஃபா உள்ளிட்டவைகளை வாங்கி அதிகாரிகள் டிராமா செய்தது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement