மாயமான சுகோய் போர் விமானத்தின் கறுப்புப் பெட்டி மீட்பு!

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சு-30 எனப்படும் சுகோய்-30 விமானத்தில், கடந்த சில நாள்களுக்கு முன் இந்திய விமானிகள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென காணாமல்போனது.

Sukhoi


அஸ்ஸாம் மாநிலம், தேஜ்பூர் அருகே இரண்டு விமானிகள், சு-30 விமானத்தில் கடந்த 23 ஆம் தேதி பயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது, ரேடார் சிக்னலிலிருந்து கிட்டத்தட்ட 60 கிலோ மீட்டர் தொலைவில், விமானம் காணாமல் போனதாகக் கூறப்பட்டது. ராணுவ ரேடாரிலிருந்து காணாமல் போனதால், மேற்கொண்டு விமானத்துக்கு என்ன ஆனது என்பதைப் பற்றிய தகவல் உறுதியாகத் தெரியவில்லை. இதையடுத்து, விமானத்தைத் தேடும் பணி தீவிரமாக நடந்துவந்தது.

இந்நிலையில், காணாமல் போன விமானத்தின் பாகங்கள் கடந்த வெள்ளிக்கிழமை, சீனா எல்லையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக, நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது, சுகோய் விமானத்தின், கறுப்புப் பெட்டியை, மீட்பு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். விமானம் விழுந்த இடத்தில், இருந்தே கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, விரைவில் விபத்துக்கான காரணம் தெரியவரும். தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!