மதுவிலக்கை அடுத்து நிதிஷ் குமாரின் டார்கெட் 'குழந்தைத் திருமணம்'... அதிரடிக்குத் தயாராகும் பீகார்!

நிதிஷ் குமார்

'மாநிலத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வந்தது போல், குழந்தைத் திருமணம் மற்றும் வரதட்சணைக் கொடுமைக்கு எதிராக தீவிரமான பிரசாரம் தொடங்கப்படும்' என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம் 'பூரண மதுவிலக்கை' பீகார் மாநிலம் முழுவதும் அமல்படுத்தினார் நிதிஷ் குமார். இதன் நீட்சியாகத் தற்போது, குழந்தைத் திருமணத்துக்கு எதிராகவும், வரதட்சணைக் கொடுமைகளுக்கு எதிராகவும் பிரசாரத்தை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். 

அவர் இந்தப் புதிய திட்டம் பற்றி மேலும், 'எனக்கு பூரண மதுவிலக்கை அமல்படுத்த உந்துதல் அளித்த சில பெண்கள் போலவே, நான் பங்கேற்ற சில பெண்களுடனான பொதுக் கூட்டங்களில்தான் இப்படியொரு விஷயத்தைச் செய்யலாமே என்று சிந்தனை உதித்தது. குழந்தைத் திருமணத்தால், ஊட்டச்சத்துக் குறைபாடான குழந்தைகள் பிறக்கின்றன.' என்று வருத்தம் தெரிவித்தார். 

அவர் மேலும், 'பீகார் மக்களிடையே நோய் எதிர்ப்புச் சக்தியைப் பொறுத்தவரை, குறிப்பிடத்தகும் அளவுக்கு வளர்ச்சி இருக்கிறது. ஆனால், நோய் எதிர்ப்புச் சக்தியைப் பொறுத்தவரை, இந்திய அளவில் பீகாரை முதல் 5 இடத்துக்குள் கொண்டு வருவதே என் எண்ணம்' என்று விளக்கினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!