சென்னை உட்பட ஆறு விமான நிலையங்களில் பாதுகாப்புச் சோதனைகள் தளர்வு!

சென்னை, திருவனந்தபுரம் உள்ளிட்ட ஆறு விமான நிலையங்களில், ஜூன் 1ஆம் தேதியிலிருந்து ஹேண்ட் பேக்கிற்கு சீல் வைப்பது நிறுத்தப்படுகிறது. 


இந்தியா முழுவதுமுள்ள விமான நிலையங்களில், பயணிகள் கொண்டுசெல்லும் ஹேண்ட் பேக், கையடக்க பேக் உள்ளிட்டவை சோதனைசெய்யப்பட்டு, அந்தப் பைகளுக்கு சீல் வைப்பது வழக்கம். தற்போது, சென்னை உள்ளிட்ட ஆறு விமான நிலையங்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் ஜூன் 1ஆம் தேதி முதல் தளர்த்தப்படவுள்ளது. அதன்படி, ஜூன் 1ஆம் தேதி முதல் ஹேண்ட் பேக், கையடக்க பேக் ஆகியவற்றுக்கு சீல் வைப்பது மற்றும் டேக் பொறுத்துவது நிறுத்தப்படும். பயணிகளின் கையடக்கப் பைகளை ஸ்கேன் செய்வதற்குரிய வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால், பயணிகளுக்குச் சுதந்திரமான பாதுகாப்புச் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது' என்று சி.ஐ.எஸ்.எப் இயக்குநர் ஓ.பி.சிங் தெரிவித்துள்ளார்.

சென்னை, திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், பாட்னா, கௌகாத்தி, லக்னோ ஆகிய விமான நிலையங்களில் ஜூன் 1 ஆம் தேதி முதல் இந்த முறை நடைமுறைப்படுத்தப்படும். ஏற்கெனவே டெல்லி, மும்பை, பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத், கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய விமான நிலையங்கள் ஹேண்ட் பேக் சோதனையை ரத்துசெய்துள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!