வெளியிடப்பட்ட நேரம்: 03:14 (31/05/2017)

கடைசி தொடர்பு:08:19 (31/05/2017)

கோவா முதல்வரின் அதிரடி அறிவிப்பு! சுற்றுலாத் தலம் சுத்தமாக மாறுமா?

கோவாவில், பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தினால் 5,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்' என கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் அறிவித்துள்ளார்.

பை

பிளாஸ்டிக் பைகளுக்கு எதிரான விழிப்புஉணர்வு அண்மைக் காலங்களில் அதிகரித்துவருகிறது. அதன் தொடர்ச்சியாக, பல்வேறு மாநிலங்களில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு குறைக்கப்பட்டுவருகிறது. சமீபத்தில், மதுரை ஆட்சியர் வீரராகவராவ், பிளாஸ்டிக் பைகளை விற்பனைசெய்த கடைகளைச் சோதனைசெய்து, அபராதம் விதித்தார்.

இதனிடையே, கோவாவில் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தக்கூடாது என மாநில அரசு தடை விதித்துள்ளது. வரும் ஜூலை முதல் பிளாஸ்டிக் பைகளை வாங்க, விற்கத் தடைசெய்யப்பட்டுள்ளது. இதை மீறுவோருக்கு, ரூபாய் 5,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் தலமான கோவாவை தூய்மையாக வைத்திருக்க, இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறுகிறார் மனோகர் பாரிக்கர்.