பசுவைக் கொன்றால் ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்... நீதிமன்றத்தின் புதிய அட்வைஸ்!

'பசுவைக் கொன்றால் ஆயுள் தண்டனை அளிக்க வேண்டும்' என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் மாநில அரசை அறிவுறுத்தியுள்ளது. 

Cow
 

ஆசியாவின் சிறந்த பசுப் பராமரிப்பு மையம் என்று ராஜஸ்தானில் உள்ள ‘ஹிங்கோனியா பசுப் பராமரிப்பு மையம்’ அழைக்கப்படுகிறது. இந்த மையத்தில், கடந்த ஜனவரி மாதத்திலிருந்து ஜூலை மாதம் வரை 8122 பசுக்கள் உடல் நலக்குறைவு மற்றும் காயங்களால் உயிரிழந்துள்ளன என்று ராஜஸ்தான் அரசு அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டது.


இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு, இன்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது, சில முக்கிய அறிவுரைகளை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. ’பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும். பசுவைக் கொன்றால், ஆயுள் தண்டனை விதித்து ராஜஸ்தான் அரசு சட்டம் இயற்ற வேண்டும்’ என்று ராஜஸ்தான் நீதிமன்றம், மாநில அரசை அறிவுறுத்தியுள்ளது. மாட்டிறைச்சித் தடை விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், ராஜஸ்தான் நீதிமன்றம் இவ்வாறு கருத்துத் தெரிவித்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!