ஆம்... திருமுருகன் தேசத் துரோகிதான்... ஆனால், மக்களுக்கு அல்ல! #VikatanSurveyResults | Vikatan survey report on the arrest of thirumurugan gandhi and four others under goondas act

வெளியிடப்பட்ட நேரம்: 08:11 (01/06/2017)

கடைசி தொடர்பு:08:41 (01/06/2017)

ஆம்... திருமுருகன் தேசத் துரோகிதான்... ஆனால், மக்களுக்கு அல்ல! #VikatanSurveyResults

திருமுருகன்

ஈழத்தில் 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு எதிராக நீதிகேட்டு நடத்தப்படும் வருடாந்திர நினைவேந்தல் இவ்வருடமும் மெரினாவில் நடைபெற்றது. ஆனால் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைத் தொடர்ந்து, மெரினாவில் மக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கும் சூழலில், மே 17 அமைப்பின் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்ட நினைவேந்தல் நிகழ்வு காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

மேலும், வெவ்வேறு இயக்கங்களைச் சேர்ந்த பதினேழு பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன் உள்ளிட்ட நால்வர் மீது மட்டும் கடந்த மே 29 அன்று குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மெழுகுவத்தி ஏந்தி நினைவேந்தல் நடத்தியதற்கு குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டது சரியா? என்று மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. பெரும்பாலானோர் 'அது சரியான நடவடிக்கை இல்லை' என்றே பதிலளித்துள்ளார்கள்.

மாறாக ஒன்றுகூடலை ஒழுங்குபடுத்தியிருக்க வேண்டும் என்றும், அமைதியான முறையில் மக்கள் ஒன்றுகூடுவதைத் தடுப்பது தவறு என்றும் சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. திருமுருகன் காந்தி மற்றும் மூவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குண்டர் சட்டம் பற்றிய மக்களின் தனிப்பட்ட கருத்து என்ன என்கிற கேள்விக்குப் பதிலளித்துள்ளவர்களில், சிலர் குண்டர் சட்டம் பதியப்பட்டது சரியென்று தெரிவித்துள்ள போதிலும், பெரும்பாலானோர்  "திருமுருகன் தேசத்துரோகிதான்; ஆனால். மக்களுக்கு அல்ல, அரசியல்வாதிகளுக்கு மட்டுமே!" என்று கருத்து தெரிவித்துள்ளனர். "மத்திய அரசைத் தாக்கிப்பேசியதால், அதன் கண்காணிப்பின்கீழ் இயங்கும் மாநில அரசு, தற்போது திருமுருகன் மீது இப்படியான நடவடிக்கையை எடுத்துள்ளது!, இனிமேல் வீட்டில் நினைவேந்தல் நிகழ்த்தினாலும் குண்டர் சட்டம் போடுவார்களா?" என்றும் காரசாரமாக அரசுக்கு எதிராக பல கேள்விகளை எழுப்பியுள்ளார்கள்.

திருமுருகன்

திருமுருகன்

திருமுருகன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்