வெளியிடப்பட்ட நேரம்: 20:51 (31/05/2017)

கடைசி தொடர்பு:07:47 (01/06/2017)

யூ.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது; முதல் முயற்சியிலேயே அசத்திய தமிழக மாணவர்!!

UPSC

யூ.பி.எஸ்.சி, 2016 ஆம் ஆண்டு குடிமைப் பணிகளில் தேர்வானவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வு முடிவுகள் யூ.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 1,099 பேர் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கர்நாடகாவைச் சேர்ந்த கே.ஆர்.நந்தினி இம்முறை முதலிடத்தைப் பிடித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த பிரதாப் முருகன் தேசியளவில் 21-வது இடத்துக்கு  வந்துள்ளார். தனது முதல்முயற்சியிலேயே இந்தியளவில் 21-வது இடத்தைப் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார் பிரதாப் முருகன். 

மேலும், 220 பேர் காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர். முதற்கட்டத் தேர்வுகள், பிரதான தேர்வுகள் மற்றும் நேர்காணல் என்று மூன்று கட்டங்களில் நடக்கும் சிவில் சர்வீஸ் தேர்வுகள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் என்று பல்வேறு உயர்மட்ட குடிமைப் பணிகளில் பணியாற்றுவதற்காக வருடா வருடம் நடத்தப்படுகிறது.