யூபிஎஸ்சி தேர்வு முடிவுகள்... என்ன சொல்கிறார் முதலிடம் பெற்ற நந்தினி?

யூபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்த நந்தினி, 'சமுதாயமும் பெண்களுக்கு சம வாய்ப்பு கொடுக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

நந்தினி

யூபிஎஸ்சி, 2016 ஆம் ஆண்டு குடிமைப் பணிகளில் தேர்வானவர்கள் பட்டியல் நேற்று வெளியானது. இதில் 1,099 பேர் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சிபெற்றனர். கர்நாடகாவைச் சேர்ந்த கே.ஆர்.நந்தினி, இந்தமுறை முதலிடத்தைப் பிடித்தார். தமிழகத்தைச் சேர்ந்த பிரதாப் முருகன், தேசிய அளவில் 21-வது இடத்துக்கு வந்தார். தனது முதல் முயற்சியிலேயே இந்திய அளவில் 21-வது இடத்தைப் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார், பிரதாப் முருகன்.

முதலிடம் பிடித்த நந்தினி கூறுகையில், "இது எனக்கு மிகவும் சந்தோஷமான தருணம். சிவில் சர்வீஸ் பரீட்சைகளில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற இலக்கு எப்போதும் இருந்தது. இப்போதுதான் எனது கனவுகளை உணரத்தொடங்கியுள்ளேன்" என்றார். மேலும், "சமுதாயமும் பெண்களுக்கு சம வாய்ப்பு கொடுக்க வேண்டும். எந்தத் துறையில் நான் பணியாற்றினாலும், அதைச் சிறப்பாகச் செய்வேன்" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!