வெளியிடப்பட்ட நேரம்: 08:43 (01/06/2017)

கடைசி தொடர்பு:10:50 (02/06/2017)

பசுவை ஏன் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்... நீதிபதி கூறும் அடடே காரணங்கள்!

'பசுவைக் கொன்றால் ஆயுள் தண்டனை அளிக்க வேண்டும், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்' என்று மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் பல்வேறு அறிவுரைகளை வழங்கி, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது ராஜஸ்தான் உயர்நீதிமன்றம். இந்த அறிவுரைகளை வழங்கியவர், நீதிபதி மனிஷ் சன் சர்மா. 

beefban

 

'ஆசியாவின் சிறந்த பசுப் பராமரிப்பு மையம் என்று ராஜஸ்தானில் உள்ள ‘ஹிங்கோனியா பசுப் பராமரிப்பு மையம்’ அழைக்கப்படுகிறது. இந்த மையத்தில், கடந்த ஜனவரி மாதத்திலிருந்து ஜூலை மாதம் வரை 8122 பசுக்கள் உடல் நலக்குறைவு மற்றும் காயங்களால் உயிரிழந்துள்ளன' என்று ராஜஸ்தான் அரசு அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு, நேற்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

வழக்கை விசாரித்த  நீதிபதி மனிஷ் சன் சர்மா, மத்திய, மாநில அரசுகளுக்கு சில முக்கிய அறிவுரைகளை  வழங்கியுள்ளார். மனிஷ் ஷர்மா நேற்றுடன் ஓய்வுபெறுகிறார் என்பதால், அவரின் கடைசி வழக்கு இந்த பசு வழக்குதான். ’பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும். பசுவைக் கொன்றால், ஆயுள் தண்டனை விதித்து ராஜஸ்தான் அரசு சட்டம் இயற்ற வேண்டும்’ என்று அறிவுறுத்தி, விசாரணையை முடித்தார். அவரின் இந்த அறிவுரைகளைப் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். பசுவை ஏன் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்ற கேள்விக்கு, பின்வரும் விவரங்களைப் பட்டியலிட்டுள்ளார் நீதிபதி மனிஷ் சன் சர்மா .

*ஆண் மயில் ஒருபோதும் தன் இணையுடன் உறவு கொள்ளாது. ஆண் மயிலின் கண்ணீரைப் பருகிதான் பெண் மயில் கர்ப்பம் தரிக்கிறது.

* 33 கோடி கடவுள்கள் பசுவினுள் வசிக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.

* பசு, ஒரு மருத்துவமனையையே தன்னுள் கொண்டுள்ளது. 

*ஆக்ஸிஜனை உட்கொண்டு,  மீண்டும் ஆக்ஸிஜனையே வெளியேற்றும் ஒரே விலங்கு, மாடுதான்.

* கல்லீரல், இதயம் உள்ளிட்டவற்றை கோமியம் பாதுகாக்கும். கோமியம் குடிப்பதால், பூர்வ ஜென்ம பாவங்களுக்கு விமோஷனம் கிடைக்கும். 

* மாடு, அதன் கொம்புகள் வழியாக, காஸ்மிக் சக்தியை (Cosmic energy) உறிஞ்சிவிடும். 

இவ்வாறு அடுக்கடுக்கான காரணங்களை முன்வைத்து, இதனால்தான் பசுவை தேசிய விலங்காக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க