பண மதிப்பிழப்பின் விளைவு... பிள்ளைகளின் படிப்புக்காக கிட்னியை விற்க முன்வந்த தாய்!

பிள்ளைகளுக்கு பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்த்தி ஷர்மா, தன் சிறுநீரகத்தை விற்கத் தயாராக உள்ளதாக, ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். 

School fees
 

ஆர்த்தி ஷர்மாவுக்கு நான்கு குழந்தைகள். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஆர்த்தி, தன் கணவருடன் கார்மென்ட்ஸ் பிஸ்னஸ் செய்து வந்துள்ளார். மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, இவர்களின் வியாபாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. அப்போது ஏற்பட்ட நஷ்டத்தை இன்றுவரை ஈடுகட்ட முடியாமல் திணறி வருவதாக, தன் ஃபேஸ்புக்கில் பதிவுசெய்துள்ளார் ஆர்த்தி. ஆர்த்தியின் கணவர், டாக்ஸி ஓட்ட ஆரம்பித்துவிட்டார். ஆனாலும் வருவாய் போதவில்லை. பிள்ளைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் செலுத்தத் தவறியதால், பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதில்லையாம். 

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தைச் சந்தித்து, தங்கள் கஷ்டத்தைத் தெரிவித்து உதவி கேட்க முடிவு செய்த ஆர்த்தி, லக்னோவுக்குப் பயணம்செய்ய எல்.பி.ஜி சிலிண்டரை சட்டவிரோதமாக சந்தையில் விற்றுள்ளார். ஏப்ரல் 29 ஆம் தேதி யோகியை சந்தித்து, பண மதிப்பிழப்பால் ஏற்பட்ட நஷ்டத்தை விவரித்துள்ளனர். யோகியும் உதவி செய்வதாக உறுதி அளித்துள்ளார். ஆனால், இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட பிறகும் முதல்வர் அலுவலகத்திலிருந்து உதவி ஏதும் வரவில்லை.

இதையடுத்து, தன் நிலையை ஃபேஸ்புக்கில் பதிவுசெய்துள்ளார். ‘என் பிள்ளைகளுக்கு ஃபீஸ் கட்ட வேண்டும். என் கிட்னியை விற்கத் தயார்’ என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் பதிவு, நெட்டிசன்ஸ் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!