டி.டி.வி.தினகரனுக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம்.. பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவு!

ttv dinakaran

டி.டி.வி.தினகரனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது டெல்லி நீதிமன்றம். தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி இரவு கைதுசெய்யப்பட்டார் டி.டி.வி.தினகரன். விசாரணைக்குப் பின்னர் ,அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி, டெல்லி நீதிமன்றத்தில் அவர் தாக்கல்செய்த மனுமீது, இரு தினங்களுக்கு முன் விசாரணை நடந்தது. அதைத் தொடர்ந்து, தீர்ப்பும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், அவரது ஜாமீன் மனுமீது நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்தது. ஆனால், நீதிமன்ற சுருக்கெழுத்தாளர் விடுமுறையில் சென்றுவிட்டதாகக் கூறி, தீர்ப்பு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், டி.டி.வி.தினகரனுக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டது டெல்லி நீதிமன்றம். அவருடன் கைதான மல்லிகார்ஜுனாவுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. இருவரும் தங்களது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. டிடிவி தினகரன், மல்லிகார்ஜுனா இருவரும், ரூ.5 லட்சம் செலுத்தி சொந்த ஜாமீனில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!