Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஜி.டி.பி வீழ்ச்சிக்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன!' - சமாளிக்கும் ஜெட்லி

அருண் ஜெட்லி

2016-2017 நிதி ஆண்டின் கடைசி காலாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி விகிதம் 6.1 சதவிதத்துக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் ஆட்சி அரியணையில் இருக்கும் பா.ஜ.க.வை விமர்சனம் செய்து வருகின்றனர். பொதுவாக, 'கடந்தாண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அதிரடியாக அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால்தான் இந்த ஜி.டி.பி சறுக்கல் ஏற்பட்டது' என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. மேலும், ஜி.டி.பி வீழ்ச்சியைப் பொதுத்தளத்திலிருந்து திசை திருப்பவே 'மாட்டிறைச்சித் தடை அறிவிப்பும்' பா.ஜ.க.வால் முன்னெடுக்கப்பட்டது என்று அரசியல் தலைவர்கள் கூறிவருகின்றனர். 

இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, 'தற்போதைய ஜி.டி.பி வீழ்ச்சிக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னரே கூட ஜி.டி.பி விகிதத்தில் வீழ்ச்சி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தெரிந்தன. 7 அல்லது 8 சதவிகித ஜி.டி.பி வளர்ச்சி என்பது சர்வதேச வளர்ச்சி அளவை ஒப்பிடும்போது மிகவும் நல்ல வளர்ச்சியே. மூன்று ஆண்டுகளில் மோடி தலைமையிலான ஆட்சி இந்தளவு ஜி.டி.பி விகிதத்தை எட்டியுளது' என்று ஜி.டி.பி வீழ்ச்சிக்குக் காரணங்களை அடுக்கினார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement