அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்....தொடரும் அவலம்!

கர்நாடகாவில், அரசு  மருத்துவமனையில் பெண்ணொருவர் தன் கணவரை  X-ray எடுக்க அழைத்துச்செல்ல, ஸ்ட்ரெச்சர் கொடுக்குமாறு கேட்டுள்ளார். மருத்துவமனை நிர்வாகம் ஸ்ட்ரெச்சர் அளிக்காத காரணத்தால், தன் கணவரை X-ray  எடுக்கும் அறைக்குத் தரதரவென இழுத்துச் சென்றுள்ளார். இந்தப் பரிதாபக் காட்சியை,  அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

xray
 

'இந்தியா முழுவதுமுள்ள அரசு மருத்துவமனைகளில், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது. சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸ் வழங்கவும் ஸ்ட்ரெச்சர் வழங்கவும் மருத்துவமனை மறுப்பது மிகவும் அபத்தமான செயல்' என்று நெட்டிசன்கள் சாடி வருகின்றனர். 


இந்தச் சம்பவம், கர்நாடகாவிலுள்ள ஷிமோலா என்னும் இடத்தில் கடந்த வாரம் நிகழ்ந்தது. மேகன் என்பது அந்த அரசு மருத்துவமனையின் பெயர்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!