வெளியிடப்பட்ட நேரம்: 14:53 (02/06/2017)

கடைசி தொடர்பு:14:53 (02/06/2017)

மக்கள் பணிக்காக பல்லாண்டு வாழ வேண்டும்... கருணாநிதியை வாழ்த்திய பினராயி!

'பல்லாண்டு வாழ்ந்து, மக்கள் பணியைத் தொடர வேண்டும்' என்று தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

pinarayi 
 

கருணாநிதியின் 60 ஆண்டு கால சட்டப்பேரவை வைர விழா மற்றும் 94-வது பிறந்தநாள் விழாவை பிரமாண்டமாகக் கொண்டாட தி.மு.க ஏற்பாடுசெய்துவருகிறது. உடல்நிலை காரணமாக கருணாநிதி இந்த விழாவில் கலந்துகொள்ள மாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. கருணாநிதிக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். சோனியா காந்தி, ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் இதுவரை வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயனும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க