சரிவை நோக்கி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி: பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணமா..?

மிக வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடுகளின் வரிசையில் முன்னணியில் இருந்துவந்த இந்தியா, தற்போது தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது.

பொருளாதாரத்தில் இந்தியா வீழ்ச்சி


உலகளவில் பொருளாதாரத்தில் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வந்தது. ஆனால், கடந்த நிதியாண்டில் இந்த வரிசையிலிருந்து இந்தியா பின்தங்கிவிட்டது. 7% என இருந்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தற்போது 6.1% ஆகக் குறைந்துள்ளது. தற்போது இந்தியா இடத்தை சீனா பிடித்துள்ளதே இந்தியாவுக்கான மிகப்பெரிய சவாலாக உள்ளது.


இந்தச் சரிவுக்கு பணமதிப்பு நீக்க நடவடிக்கை  காரணமாக இருக்கலாம் எனப் பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். கடந்தாண்டு நவம்பர் மாதம் அமலுக்கு வந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டின் 86% இந்திய ரூபாயின் சுழற்சி நிறுத்தப்பட்டது. இதன் தாக்கம் இப்போது இந்தியப் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் பல துறைகளையும் பாதித்து வருகின்றது.


பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் இந்தியாவில் அந்நிய முதலீடு குறைந்துவிட்டதாகவும் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். ஆனால், ’தற்போதைய இந்திய நிலைப்பாடு விரைவில் மாறும் எனவும் பருவநிலை மாற்றங்களால்தான் இந்த வீழ்ச்சி’ என்றும் மத்திய நிதியமைச்சர் கருத்துத் தெரிவித்து வருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!