உயரத் தொடங்கிய பங்குச்சந்தை நிலவரம்!

இன்று காலை உச்சத்தில் தொடங்கிய இந்தியப் பங்குச்சந்தை, மாலையில் மேலும் அதிகரித்து நேர்மறையான குறியீட்டுடன் நிறைவடைந்தது.

sensex high
இன்றைய வர்த்தகத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 132.12 புள்ளிகள் உயர்ந்து 31,269.71 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறீயீட்டு எண் நிஃப்டி 40.05 புள்ளிகள் அதிகரித்து 9,656.15 புள்ளிகளாகவும் இருந்தது.
தொடர்ந்து உயரத் தொடங்கிய பங்குச்சந்தை இன்று மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 135.70 புள்ளிகள் உயர்ந்து 31,273 புள்ளிகளாக நிறைவடைந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 37.40 புள்ளிகள் உயர்ந்து 9,653 புள்ளிகளாகி நின்றது.

பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக ட்ரம்ப் அறிவித்த பின்னர், ஆசியாவில் பங்குச்சந்தை நிலவரம் உயரத் தொடங்கியதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!