வெளியிடப்பட்ட நேரம்: 10:04 (03/06/2017)

கடைசி தொடர்பு:10:02 (03/06/2017)

தீவிரவாதிகளுக்கு நிதி : காஷ்மீர், டெல்லியில் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை!

தீவிரவாதிகளுக்கு நிதி வழங்கப்பட்டது தொடர்பாக வந்த புகாரையடுத்து, ஜம்மு-காஷ்மீர் மற்றும் டெல்லியில், தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்திவருகின்றனர்.


தீவிரவாதிகளுக்கு நிதி வழங்கியது தொடர்பாக, தேசிய புலனாய்வு அமைப்புக்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, இன்று காலை முதல் ஜம்மு-காஷ்மீர் மற்றும் டெல்லியில் தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக, ஜம்மு-காஷ்மீரில் 14 இடங்களிலும், டெல்லியில்  எட்டு இடங்களிலும் இந்தச் சோதனை நடந்துவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


முக்கியமாக, ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாதத் தலைவர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதாக, தேசிய புலனாய்வு அமைப்புக்குத் தகவல் கிடைத்துள்ளது.  இதனால், பிரிவினைவாத தலைவர் நயீம் கான், ஹூரியத் கட்சி தலைவர் ராஜா கல்வால் உள்ளிட்டோர் வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்திவருகின்றனர். 


மேலும், ஹவாலா ஏஜென்ட்டுகளின் வீட்டிலும் சோதனை நடந்துவருவதாகக் கூறப்படுகிறது.