Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தீவிரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர் உயிரிழந்தார்!

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த மணிவண்ணன் உயிரிழந்துள்ளார்.

பலி

ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் தொடர்ந்து இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவத்தினரும் எதிர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காஷ்மீர் மாநிலத்தில் பதற்றமான சூழல் தொடர்ந்து நிலவி வருகிறது. இந்நிலையில் காஷ்மீரில் பதற்றமான சூழலை சமாளிக்க, ராணுவத்தினருக்கு முழு சுதந்திரம் வழங்கபடுவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே இன்று காஷ்மீரின் காஸிகுண்ட் பகுதியில் இந்திய ராணுவத்தினரின் வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு வீரர்கள் பலியாகியுள்ளனர், மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர். திருவண்ணாமலையைச் சேர்ந்த மணிவண்ணன் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நாயக் திபாக்கும் திவிரவாத தாக்குதலில் பலியாகியுள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement