வெளியிடப்பட்ட நேரம்: 13:14 (04/06/2017)

கடைசி தொடர்பு:13:21 (04/06/2017)

இது ஒரு வரலாற்று நிகழ்வு... இஸ்ரோ தலைவர் பெருமிதம்!

இஸ்ரோ தயாரித்துள்ள ஜிஎஸ்எல்வி மார்க் - 3 ராக்கெட் (GSLV-Mark III launch), இனிவரும் காலங்களில் சொந்த மண்ணில் இருந்து தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்த வழிவகுக்கும் என்று இஸ்ரோ தலைவர் கிரண் குமார் தெரிவித்துள்ளார்.

ISRO

ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் உள்நாட்டிலேயே கிரையோஜெனிக் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. முழுவதுமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் முதல் கனரக ராக்கெட் இது. நான்காயிரம் கிலோ எடையுள்ள செயற்கைக்கோளைச் சுமந்து செல்லும் திறனுடன்  இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயற்கைக்கோளின் மொத்த எடை 3,136 கிலோ ஆகும்.   ஜிசாட் 19 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்  நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ளது. 


இதுகுறித்து செய்தியாளர்களை சந்திப்பில் பேசிய இஸ்ரோ தலைவர் கிரண் குமார்  ’ஸ்ரீஹரிகோட்டாவின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் நாளை மாலை 5.28 மணியளவில் விண்ணில் செலுத்தப்படும். இது ஒரு வரலாற்று நிகழ்வு’ என்று குறிப்பிட்டுள்ளார். ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டின் கவுன்ட் டவுன் இன்று மாலை தொடங்குகிறது.
 
 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க