Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'கங்கை நதியை தூய்மைப்படுத்த 10 ஆண்டுகள் ஆகும்' - உமாபாரதி

இந்திய நதிகளில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது, கங்கை நதி. ஆனால், உலகின் மாசடைந்த நதிகளின் பட்டியலில் கங்கையும் உள்ளது. கங்கை நதியைத் தூய்மைப்படுத்துவதாகப்  பல ஆண்டுகளாகச் சொல்லப்பட்டு வருகிறது. 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், மோடி வாரணாசித் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது, கங்கை நதியைத் தூய்மைப்படுத்துவது எங்களின் முக்கிய இலக்கு என்று அவர் பிரசாரம் செய்தார். இதையடுத்து, மத்திய அரசு ஆட்சிக்கு வந்தது. பிறகு, கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் பணிக்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியது மத்திய அரசு. கங்கை நதியைத் தூய்மைப்படுத்துவோம் என்று மத்திய அரசு தொடர்ந்து கூறிவருகிறது.


இந்நிலையில், தசரா பண்டிகையை முன்னிட்டு கங்கை அருகே சிறப்பு ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது.  அதில், மத்திய அமைச்சர் உமா பாரதி கலந்துகொண்டார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் பணி இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்ட பணி தற்போது முடிந்துள்ளது.


கங்கை நதியைத் தூய்மை செய்யும் பணி தொடர்ந்து நடைபெறும். கங்கை நதியை முழுமையாக தூய்மைப்படுத்த 10 ஆண்டுகள் ஆகும். அதன் பிறகு, அதன் தூய்மையைத் தக்கவைக்க பல்வேறு விழிப்புஉணர்வு ஏற்படுத்த வேண்டியிருக்கும். மேலும், கங்கை நதியின் அருகே உள்ள தொழிற்சாலைகளை வேறு இடத்துக்கு மாற்றும் பணிகளில் உத்தரப்பிரதேச அரசு ஈடுபட்டுள்ளது" என்று கூறினார்.

'கங்கை நதியை, அடுத்த ஆண்டுக்குள் உலகிலேயே தூய்மையான 10 நதிகள் பட்டியலில் கொண்டுவருவோம்' என்று உமா பாரதி முன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement