காஷ்மீரில் நான்கு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை | Four terrorists killed in Kashmir

வெளியிடப்பட்ட நேரம்: 06:59 (05/06/2017)

கடைசி தொடர்பு:07:46 (05/06/2017)

காஷ்மீரில் நான்கு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரில் நான்கு தீவிரவாதிகளை ராணுவம் சுட்டுக் கொன்றது.

ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில், சும்பல் என்ற பகுதியில் உள்ள சி.ஆர்.பி.எஃப் முகாம் மீது அதிகாலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.  இந்தத் திடீர் தாக்குதலால் ராணுவ வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, நிலைமையை சுதாரித்துக் கொண்ட ராணுவம், தீவிரவாதிகள் மீது பதிலடித் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் நான்கு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.