Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என்.டி.டிவி பத்திரிகையாளர் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை!

தனியார் வங்கியில் கடன் வாங்கி நஷ்டம் ஏற்படுத்தியதாக, என்.டி.டிவி பத்திரிகையாளர் வீட்டில் சிபிஐ திடீர் சோதனை நடத்தியுள்ளது.

சிபிஐ சோதனை


என்.டி.டிவி-யின் நிர்வாக இயக்குநர் மற்றும் துணை நிறுவனரான ப்ரணாய் ராய் வீட்டில், இன்று காலை சிபிஐ திடீர் சோதனை மேற்கொண்டது. ஐசிஐசிஐ வங்கியில் கடன் வாங்கி நஷ்டம் ஏற்படுத்தியதற்காக, ப்ரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ராய்  மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ப்ரணாய் ராய்க்குச் சொந்தமாக டெல்லி, டேராடூன் ஆகிய இடங்களில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில், ஒரே நேரத்தில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. புகாரின் அடிப்படையில், ப்ரணாய் ராய் 48 கோடி ரூபாய நஷ்டம் ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த என்.டி.டிவி நிர்வாகத்தினர், ‘பொய்யான, ஆதாரமற்ற குற்றச்சாட்டை சிபிஐ கையில் எடுத்துள்ளது. சேனலின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே சிபிஐ முயற்சிக்கிறது. பொய்யான குற்றச்சாட்டுக்கு எதிராக என்.டி.டிவி தொடர்ந்து போராடும்’ என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close