ஆளுநர் கிரண்பேடி - முதல்வர் நாராயணசாமி இடையே வலுத்து வரும் மோதல்!

புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி, ஆளுநர் கிரண்பேடி மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளார். இதற்கு பதிலடி தரும் வகையில் ஆளுநர் கிரண் பேடியும் சமூக வலைதளங்களில் தொடர் பதில் தாக்குதல்களை பதிவு செய்து வருகிறார்.

புதுச்சேரி முதல்வர்- ஆளுநர்


புதுச்சேரியில் மருத்துவ முதுகலை படிப்புக்கான கலந்தாய்வின்போது புதுச்சேரி துணைநிலை ஆளுநராகப் பதவி வகிக்கும் கிரண் பேடி அதிரடியாகச் செயல்பட்டார். அப்போது, மருத்துவக் கலந்தாய்வு நேர்மையாக நடைபெறவில்லை என்றும், புதுச்சேரி முதல்வரின் ஆட்சி குறித்தும் கிரண் பேடி தொடர் புகார்களை சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வந்தார்.

இதைத்தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும், ‘கிரண்பேடி அரசு குறித்தத் தவறான தகவலகளை சமூக வலைதளங்களில் பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டும்’ என ஆவேசம் காட்டினார். இந்நிலையில் மீண்டும் கிரண் பேடி சமூக வலைதளங்களில் நாராயணசாமியை தாக்க துவங்கியுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் கிரண்பேடி குறிப்பிடுகையில், ‘நான் நல்ல நிர்வாகியாக இருக்க வேண்டுமா, ரப்பர் ஸ்டாம்பாக இருக்க வேண்டுமா, மக்களின் குறைகளைத் தீர்க்க சிறப்பாகச் செயல்பட வேண்டியது அவசியம். இதற்காக புதுச்சேரியின் ஆளுநரும், முதல்வரும் இணைந்து செயல்படவேண்டும். நான் செய்வதை தவறு என யார் கூறுகிறார்கள்’ என அடுக்கடுக்கானக் கேள்விகளை பதிந்து வருகிறார். இதனால் புதுச்சேரியில் ஆளுநர்- முதல்வர் இடையேயான மோதல் வலுத்து வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!