ஜி.எஸ்.டி : அருண் ஜெட்லிக்குக் கமல் அளித்த பதில்..!

சினிமா மீதான ஜி.எஸ்.டி வரியைக் குறைக்க வேண்டும் என சிறிது நாள்களுக்கு முன்பு கமல் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருந்தார். 

kamal


மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி விதித்த ஜி.எஸ்.டி வரியைக் கண்டித்து பல்வேறு அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கமல் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது, ’அரசு ஹாலிவுட் படத்துக்கு நிகராக இந்திய சினிமாவை ஒப்பிட்டு 28 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதிப்பது தவறு. திரைத்துறையை நம்பி ஏராளமானோர் உள்ளனர். அதனால் ஜி.எஸ்.டி வரி விதிப்பு குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்தித் திரையுலகம் ஜி.எஸ்.டி வரியை ஏற்றாலும் நாங்கள் ஏற்க மாட்டோம். 28 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்தினால் சினிமாவை விட்டு விலகுவதைத் தவிர வேறு வழியில்லை’ என்று கூறினார். இந்தச் செய்தி கோலிவுட் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக தொலைக்காட்சியில் பேசிய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கமலுக்குப் பதிலளிக்கும் விதமாக, ’நாங்கள் ஒவ்வொருவரின் கருத்தையும் அலசி ஆராய்ந்துதான் வருகிறோம். ஆனால் ஊடகங்களில் பிரசாரம் செய்வதன் மூலம் அரசுக்கு அழுத்தம் ஏற்படுத்திவிடலாம் என்று நினைப்பவர்களின் முயற்சி ஒருபோதும் எடுபடாது எனப் பேசியிருந்தார்.

தற்போது அருண் ஜெட்லி கூறிய கருத்துக்குக் கமல் ட்விட்டரில் பதில் தெரிவித்துள்ளார். அதில்,’யாருக்கும் நாங்கள் அழுத்தம் கொடுக்கவில்லை. இது நாங்கள் வைக்கும் கோரிக்கைதான். இது எங்கள் வாழ்வாதாரப் பிரச்னை. பிராந்திய மொழி சினிமாவைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சினிமாவுக்கான ஜி.எஸ்.டி வரியால் பிராந்திய மொழிகள் சிதையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பிராந்திய மொழிகள் அழிந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் ஜி.எஸ்.டி வரியைக் குறைத்து பிராந்திய மொழி சினிமாவைக் காப்பாற்ற வேண்டும்’ என்று  ட்வீட்டில் பதில் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!