வெளியிடப்பட்ட நேரம்: 18:39 (06/06/2017)

கடைசி தொடர்பு:19:09 (06/06/2017)

பாபா ராம்தேவுடன் கைக்கோக்கும் யோகி ஆதித்யநாத்!

யோகா தினத்தன்று பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவுடன் உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் யோகா பயிற்சி செய்யவுள்ளார்.

பாபா

2015-ம் ஆண்டு முதல், ஜூன் 21-ம் தேதி உலக யோகா தினம் கொண்டாடப்படுகிறது. மத்தியில் பா.ஜ.க ஆட்சியமைத்த பின்னர், யோகா தினம் பெரியளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த வருட யோகா தினத்தை உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் வெகு விமர்சையாகக் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து   கொள்ளவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் லக்னோவில் நடக்கும் யோகா நிகழ்வில், பதஞ்சலி நிறுவனரும், யோகா குருவுமான பாபா ராம்தேவுடன் இணைந்து உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் யோகா செய்யவுள்ளார். இந்த யோகா நிகழ்வில் உ.பி ஆளுநர் ராம் நாயக்கும் கலந்து கொள்கிறார். மேலும் இதில் சுமார் 50,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.