போக்குவரத்து காவலருக்கு பளார்... பா.ஜ.க எம்.எல்.ஏ அராஜகம்!

லக்னோவில் போக்குவரத்து காவலரை, பா.ஜ.க எம்.எல்.ஏ ஶ்ரீராம் சொன்கர் அறைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி 

அண்மையில் நடந்த உத்தர பிரதேச தேர்தலில் வெற்றிபெற்று பா.ஜ.க ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து அங்கு முதலமைச்சராக ஆதித்யநாத் பொறுப்பேற்றார். இதற்கு பின்பு பல அதிரடி அறிவிப்புகள், புதிய சர்ச்சைகள் என உத்தர பிரதேச அரசியல் நிலவரம் நாடு முழுவதும் கவனிக்கப்பட்டு வருகிறது. இது ஒரு புறம் இருக்க பா.ஜ.கவுக்கு வேண்டியவர்கள் தொடர்ந்து பொது இடங்களில் சர்ச்சையைக் கிளப்பி மாட்டிக்கொள்கின்றனர். குறிப்பாக உ.பியில் தொடர் சர்ச்சைகளை பா.ஜ.கவினர் ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் பா.ஜ.க எம்.எல்.ஏ போக்குவரத்து காவலரைத் தாக்கியுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஶ்ரீராம் சொன்கர் என்ற எம்.எல்.ஏ, இன்று ஒரு வழிப்பாதையில் வந்துள்ளார்.  மேலும் இதை கண்டித்த போக்குவரத்து காவலருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அவர் காவலர் கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த சம்பவம் உ.பியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதனிடையே கடந்த ஏப்ரல் 17-ம் தேதி, பா.ஜ.க எம்.எல்.ஏ மஹேந்திர யாதவ், சுங்கச்சாவடி ஊழியரைத் தாக்கிய வீடியோ வைரலாகியது குறிப்பிடத்தக்கது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!