வெளியிடப்பட்ட நேரம்: 16:55 (07/06/2017)

கடைசி தொடர்பு:16:55 (07/06/2017)

மன்மோகன் சிங் பிரதமர் ரூட் பிடித்த பின்னணி.. பரபர கதை பேசும் திரைப்படம்!

மன்மோகன் சிங் இந்தியப் பிரதமராக இருந்த காலக்கட்டத்தை விவரிக்கும் திரைப்படம்தான் 'The Accidental PrimeMinister'. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. 

Manmohansingh

தலைசிறந்த பொருளாதார நிபுணரும், அரசியல்வாதியுமான மன்மோகன் சிங், 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டுவரை இந்திய பிரதமராகப் பதவி வகித்தார். சஞ்சய் பாரு என்பவர் 2004 - 2008 வரை மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக இருந்தார். அரசியல் விமர்சகரான சஞ்சய்,  மன்மோகன் சிங் பற்றி 2014 ஆம் ஆண்டு புத்தகம் ஒன்றை வெளியிட்டார். அந்தப் புத்தகத்தில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியது குறித்து சஞ்சய் எழுதி இருந்தார். மன்மோகன் முழு அதிகாரத்துடன் செயல்படவில்லை என்றும் அவரின் செயல்பாடுகளில் சோனியா காந்தியின் தலையீடு இருந்தது என்றும் அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

தற்போது, அந்த சர்ச்சை நிறைந்த புத்தகத்தை திரைப்படமாக எடுக்க உள்ளார் இயக்குநர் விஜய் ரத்னாகர் கத்தே. ’The Accidental PrimeMinister’ எனும் அந்த புத்தகத்தின் பெயரையே திரைப்படத்துக்கும் வைத்துவிட்டனர். இத்திரைப்படத்தை சுனில் போரா தயாரிக்கிறார். மன்மோகன் வேடத்தில் அனுபம் கேர் நடிக்கிறார். 2018 ஆம் ஆண்டு வெளியாக உள்ள இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவு செய்த அனுபம் கேர் ‘சம கால வரலாற்றில் வாழும் ஒருவரின் வேடத்தை ஏற்று நடிப்பது சவாலாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க