வெளியிடப்பட்ட நேரம்: 17:53 (07/06/2017)

கடைசி தொடர்பு:17:55 (07/06/2017)

சீதாராம் யெச்சூரியை தாக்க முயற்சி... டெல்லியில் பரபரப்பு!

டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை தாக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சீ

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக செயல்பட்டு வருபவர் சீதாராம் யெச்சூரி. இவர் மாநிலங்களவை எம்.பியாகவும் செயல்பட்டு வருகிறார். குடியரசுத் தலைவர் தேர்தலில் மதசார்பற்ற பொதுவான ஒரு வேட்பாளரை நிறுத்தப்பட வேண்டும் என தொடர்ந்து அவர் வலியுறுத்தி வருகிறார். மேலும் இவர் அண்மையில் நடைபெற்ற கருணாநிதியின் வைர விழாவிலும் பல்வேறு தலைவர்களுடன் கலந்துகொண்டார்.

இதனிடையே மத்தியப் பிரதேசத்தில் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த அவர், இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது 2 பேர் சீதாராம் யெச்சூரியை தாக்க முயன்றனர். இதில் அவருக்கு பெரிதாக காயம் எதுவும் ஏற்படவில்லை. தாக்குதலில் ஈடுபட முயன்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரும் ஹிந்து சேனா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.