Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மத்தியப்பிரதேசம் : பட்டாசு ஆலையில் நடந்த தீ விபத்தில் 25 பேர் பலி

மத்தியப்பிரதேசத்தில் பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.


மத்தியப்பிரதேச மாநிலம் பாலாகாத் மாவட்டத்தில் உள்ள பாதன் என்ற கிராமத்தில்,  ஒரு பட்டாசு ஆலை இயங்கிவந்தது. இந்தப் பட்டாசு ஆலையில், நேற்று மாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. உடனே, சம்பவ இடத்துக்கு 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வந்து போராடி தீயை அணைத்தன. இந்தச் சம்பவத்தில் 25 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். 


இந்தச் சம்பவத்தையடுத்து, அங்கு பார்வையிட்ட கலெக்டர் பரத் யாதவ், "தற்போதுவரை  எட்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் அனைவரும் ஆலையில் பணியாற்றிய ஊழியர்கள்தான் என்று கூறப்படுகிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காயமடைந்தவர்கள், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.


இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா 2 லட்சம் நிதி வழங்கப்படும் என்று மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் உத்தரவிட்டுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement