எஜமானின் பணத்தைப் பதம்பார்த்த ஆடு... 66 ஆயிரம் அம்பேல்!

 

 

உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் சில்வாபூர் என்னும் கிராமம் உள்ளது. அங்கு சர்வேஷ் என்னும் விவசாயி செல்லமாக ஓர் ஆட்டை வளர்த்து வந்துள்ளார்.

goat

 

வறுமையின் காரணமாக அந்த ஆட்டுக்குப் போதுமான உணவை அவரால் கொடுக்க முடியவில்லை. பசியால் வாடிய ஆடு ஒரு கட்டத்தில் செய்வதறியாமல் தன் எஜமானர் குளிக்கச் சென்ற சமயத்தில் அவரின் பேன்ட் பாக்கெட்டிலிருந்த பணத்தை மென்று தின்றுவிட்டது.

goat
 

குளித்துமுடித்துவிட்டு தன் அறைக்கு வந்து இந்தக் காட்சியைப் பார்த்த சர்வேஷ் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். ஆடு மென்று தின்றது பத்து இருபது ரூபாய் நோட்டுகளை அல்ல.. 66,000 ரூபாயை மொத்தமாக மென்று விழுங்கிவிட்டது. வீடு கட்டுமான பணிகளுக்காகத் தன் சகோதரரிடம் 66,000 ரூபாய் கடன் வாங்கி வந்துள்ளார் சர்வேஷ். அந்தப் பணத்தைப் பசிக்கு சூறையாடிவிட்டது அவர் வளர்த்தச் செல்ல ஆடு. சர்வெஷ் கோவத்தில் அடிக்க சென்றபோது அவரைப் பாவமாக பார்த்துள்ளது. மனமுடைந்த சர்வேஷ் ஆட்டை சந்தையில் விற்றுவிட்டார். இந்தச் சம்பவத்தைக் கண்ட கிராம மக்கள் சிரிப்பதா வருத்தப்படுவதா என்று செய்வதறியாமல் முழித்துள்ளனர்!
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!