இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு சீக்கிரமே வேலை!

இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு விரைவில் ராணுவப் போலீஸ் பதவி வழங்கப்படும் என்று கூறியுள்ளார் ராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத். 

bipin

சில நாள்களுக்கு முன்னர் இந்திய ராணுவத்தில் முதன்முறையாக பெண்களுக்கு பாதுகாப்புப் பணி வழங்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று செய்தி வெளியானது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராணுவத் தளபதி பிபின் ராவத், 'முதலில் ராணுவப் போலீஸாக பெண்கள் நியமிக்கப்படுவர். பின்னர் படிப்படியாக மற்ற வேலைகளுக்கும் அவர்கள் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும்போது, பலமுறை பெண்களை எதிர்கொள்ள நேரிடும். அதற்காகவே இந்த நியமனம்' என்றும் தெரிவித்துள்ளார் ராணுவத் தளபதி. 

காஷ்மீரில் தொடர்ந்து அமைதியற்ற நிலை நீடித்துவரும் நிலையில் அது குறித்து பிபின் ராவத் கூறுகையில், 'பாகிஸ்தான், காஷ்மீர் இளைஞர்கள் இடையே தவறான கருத்துகளை கவர்ச்சிகரமான வீடியோக்கள் மூலம் பரப்புகின்றனர். இது காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருக்கும் சிலராலும் ஆதரிக்கப்படுகிறது. தீவிரவாத இயக்கங்களில் இணைந்த இளைஞர்கள் பற்றி அவர்கள் புகழும் அவல நிலையும் இருக்கிறது. ஆனால், விரைவில் காஷ்மீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்' என்று கூறியுள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!