வெளியிடப்பட்ட நேரம்: 16:19 (10/06/2017)

கடைசி தொடர்பு:16:23 (10/06/2017)

பசு தாய்க்கும், கடவுளுக்கும் சமம் ... ஹைதராபாத் நீதிபதி உருக்கம்!

ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதியை தொடர்ந்து ஹைதராபாத் உயர்மன்ற நீதிபதியும் மாடுகளை புகழ்ந்து பேசியிருப்பது பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளார். 

cow
 

'மயில்’ என்ற ஒரே வார்த்தையின் மூலம் சமூக ஊடகங்களில் ட்ரெண்ட் ஆனவர் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி மனிஷ் சன் சர்மா. ’பசுவைக் கொன்றால் ஆயுள் தண்டனை அளிக்க வேண்டும், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்' என்று மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் பல்வேறு அறிவுரைகளை வழங்கி, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அதுமட்டுமன்றி ஆண் மயில் ஒருபோதும் தன் இணையுடன் உறவு கொள்ளாது என்றும் ஆண் மயிலின் கண்ணீரைப் பருகிதான் பெண் மயில் கர்ப்பம் தரிக்கிறது என்றும் கூறி ஒரே நாளில் ஃபேமஸ் ஆனார்.

அவரைத் தொடர்ந்து ஹைதராபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக பி.சி.சங்கரா ராவ் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பசுவதை தொடர்பான வழக்கு விசாரணையின்போது பேசிய நீதிபதி சங்கரா ராவ், ‘பசு இந்தியாவின் புனிதமான சொத்து. பசு தாய்க்கும் கடவுளுக்கும் சமமானது. ஆரோக்கியமான பசுக்களை இறைச்சிக்காக சந்தையில் விற்கக்கூடாது. வரலாற்றில் மன்னர் பாபர், அக்பர், ஜஹாங்கீர் மற்றும் அஹமது ஷா ஆகியோரும் பசுவதைக்கு தடை செய்தனர்’ என்று தெரிவித்தார். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க