Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மத்தியப் பிரதேச முதல்வரிடம், உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினரின் கோரிக்கை!

 

மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், என உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினர், அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகானிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

சிவராஜ்

 

கடந்த 6-ம் தேதி மத்தியப் பிரதேசத்தில், விவசாயப் பொருள்களுக்கு அதிக விலை தரக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது காவல் துறையினரின் தடுப்பை மீறி, பேரணி சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 6 விவசாயிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து இன்று முதல், மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் அமைதி திரும்பும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக, அம்மாநில முதல்வர் சிவராஜ் சௌகான் அறிவித்தார்.

இந்நிலையில் தற்போது துப்பாக்கிச் சூட்டில் பலியான விவசாயிகளின் குடும்பத்தினர், தற்போது உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் சிவராஜ் சிங் சௌகானைச் சந்தித்துள்ளனர். உண்ணாவிரதத்தை முடித்து கொள்ளுமாறு, அவர்கள் சிவராஜ் சிங் சௌகானிடம் வலியுறுத்தியுள்ளனர். மேலும் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிகள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement