சினிமா டிக்கெட்டுகள் மீதான ஜி.எஸ்.டி வரி குறைப்பு!

டெல்லியில் நடந்த  ஜி.எஸ்.டி ஆய்வுக்கூட்டத்தில் இன்சுலின், சினிமா டிக்கெட், புத்தகப் பை உள்ளிட்ட பொருள்களுக்கு விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டுள்ளது.

gst

சரக்கு மற்றும் சேவை வரி மசோதா, நாடு முழுவதும் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் அருன் ஜெட்லி தலைமையில் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று, பொருள்களுக்கான புதிய வரிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. புதிய வரி விதிப்புக்கு பல தரப்பில் இருந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து டெல்லியில் இன்று ஜி.எஸ்.டி தொடர்பான 16-வது ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வரியை குறைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

இதனிடையே கூட்டத்தின் முடிவில் 133 பொருள்களில் 66 பொருள்களுக்கு வரி குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 100 ரூபாய்க்கு குறைவான சினிமா டிக்கெட்டுகளுக்கு விதிக்கப்பட்ட 28% வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. புத்தகப் பைகள் மீதான வரியும் 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்சுலின் மீதான வரி 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!