காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் கைது..!

ஜம்மு- காஷ்மீர் மாநில பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் மற்றும் முகம்மது கல்வால் ஆகியோரை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். 


காஷ்மீர் மாநிலத்தில் ஒரு மாத காலத்துக்கும் மேலாக அமைதியற்ற சூழ்நிலை நீடித்து வருகிறது. எனவே, காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீர் மாவட்டங்களில் ஏராளமான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், காஷ்மீர் பிரிவினைவாத இயக்கங்களில் ஒன்றான உம்மத்-இ-இஸ்லாமிய அமைப்பின் தலைவர் மவுலானா சர்ஜான் பர்காதி என்பவரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

இதனையடுத்து அவரது குடும்பத்தினரைச் சந்திப்பதற்காக மற்றொரு பிரிவினைவாதத் தலைவரான யாசின் மாலிக், சோபியான் மாவட்டத்திலுள்ள அவரது வீட்டுக்குச் சென்றார். அப்போது யாசின் மாலிக்கும் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார். மாலிக்குடன் சென்ற நூர் முகமது கல்வால் என்பவரையும் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!