ஐஐடி நுழைவுத் தேர்வில் சாதித்துக் காட்டிய சமோசா விற்பவரின் மகன்! | samosa seller's son secured 64th rank in this year's JEE

வெளியிடப்பட்ட நேரம்: 03:37 (12/06/2017)

கடைசி தொடர்பு:07:59 (12/06/2017)

ஐஐடி நுழைவுத் தேர்வில் சாதித்துக் காட்டிய சமோசா விற்பவரின் மகன்!

நாட்டின் பல்வேறு இடங்களில் இருக்கும் இந்தியத் தொழில்நுட்பக் கழகமான ஐஐடி-யில் சேர்ந்து படிப்பதற்காக, ஒவ்வோர் ஆண்டும் ஜெஇஇ (JEE) தேர்வுகள் நடத்தப்படும். இந்த ஆண்டு நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், ஹைதராபாத்தைச் சேர்ந்த சமோசா விற்கும் சுப்பா ராவின் மகன் மோகன் அப்யாஸ், அகில இந்திய அளவில் 64-வது இடத்தைப் பிடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றுவருகிறார். 

IIT

இதுகுறித்து அப்யாஸ், 'நான் முதல் 50 இடங்களுக்குள் வந்துவிடுவேன் என்று நினைத்தேன். அதனால், முடிவுகள் வெளியானவுடன் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தேன். ஆனால், இப்போது சந்தோஷமாக உணர்கிறேன். என் ஆதர்ச நாயகன் அப்துல் கலாம்தான்' என்று பெருமை ததும்பப் பேசும் இந்தச் சாதனை நாயகன் தன் வெற்றிக்குக் காரணம் பெற்றோர்களும் ஆசிரியர்களுமே என்கிறார்.

இதுகுறித்து அப்யாஸின் தந்தை ராவ், 'எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவன் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வரை  படிப்பான். அவன் 10-வது வகுப்பில் படிக்கும் வரை விற்பனைக்குத் தேவையான சமோசாக்களைச் செய்வதற்கு உதவியாக இருப்பான்.' என்று தன் மகனின் வெற்றிகுறித்து நெகிழ்ச்சியாகப் பேசினார்.