'இந்தியாவை உலகின் உணவுத் தொழிற்சாலையாக மாற்ற முயல்கிறோம்!'- மத்திய அமைச்சர் | Government wants to make India a 'food factory' of the world: Harsimrat Kaur Badal

வெளியிடப்பட்ட நேரம்: 05:13 (12/06/2017)

கடைசி தொடர்பு:10:22 (12/06/2017)

'இந்தியாவை உலகின் உணவுத் தொழிற்சாலையாக மாற்ற முயல்கிறோம்!'- மத்திய அமைச்சர்

இந்தியாவை உலகின் உணவுத் தொழிற்சாலையாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருவதாக, மத்திய உணவு பதப்படுத்தும்துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் தெரிவித்துள்ளார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் அரசு அமைந்து மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, மூன்றாண்டுகளில் மத்திய அரசு செய்த திட்டங்கள்குறித்து மக்களுக்கு எடுத்துரைக்க, பல்வேறு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல, பல்வேறு புதிய திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுவருகின்றன. இந்நிலையில், மத்திய உணவு பதப்படுத்தும்துறை அமைச்சர் முக்கியமான தகவலை எடுத்துரைத்துள்ளார். அவர், கேரளாவில் சுமார் 80 ஏக்கரில் அமைய உள்ள உணவுப் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். 

அதன்பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது, 'இந்தியாவை உலகின் உணவுத் தொழிற்சாலையாக மாற்றுவதற்கு ஏதுவாக முதலீட்டாளர்களுக்கு வெளிப்படையான சூழல் உருவாக்கப்படும். உணவுத் துறையில் முதலீடுசெய்ய விரும்புபவர்களுக்குத் தேவையான இலகுவான, வெளிப்படையான நிலைமையை உருவாக்குவதற்கு இந்த அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். இதனால், இந்தியாவுக்கு உணவுப் பொருளாதாரத்தில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுத் தர முயல்கிறோம்.' என்று கூறியுள்ளார்.