Published:Updated:

`கோவிட்டால் இந்த ஆண்டு இறந்தவர்களில் 92% பேர் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள்!' - ICMR

கொரோனா மரணம்

உலக அளவில் குறைந்துவரும் தொற்று எண்ணிக்கையின் சராசரி 55.7%. இதனுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் தொற்று எண்ணிக்கை 96.4% குறைந்துள்ளது. அதேபோல் கோவிட் இறப்பு எண்ணிக்கையும் 76.6% குறைந்துள்ளது.

`கோவிட்டால் இந்த ஆண்டு இறந்தவர்களில் 92% பேர் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள்!' - ICMR

உலக அளவில் குறைந்துவரும் தொற்று எண்ணிக்கையின் சராசரி 55.7%. இதனுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் தொற்று எண்ணிக்கை 96.4% குறைந்துள்ளது. அதேபோல் கோவிட் இறப்பு எண்ணிக்கையும் 76.6% குறைந்துள்ளது.

Published:Updated:
கொரோனா மரணம்

2022-ம் ஆண்டில் ஏற்பட்ட 92% கோவிட் இறப்புகள், தடுப்பூசி போடப்படாத நபர்களால் ஏற்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) இயக்குநர் டாக்டர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

வாரம்தோறும் நடைபெறும் சுகாதார அமைச்சகத்தின் செய்தியாளர் சந்திப்பில் நேற்று பேசிய டாக்டர் பார்கவா, ``இந்த ஆண்டில் ஏற்பட்ட 92 சதவிகித கோவிட் இறப்புகள், தடுப்பூசி போடப்படாத நபர்களால் ஏற்பட்டவை என்று தெரிவித்தார். மக்களிடையே பரவலாகச் செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் நூற்றுக்கணக்கான உயிர்களைப் பாதுகாத்து மிக முக்கியப் பங்காற்றியுள்ளன என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது என குறிப்பிட்டார்.

Covid 19 Outbreak
Covid 19 Outbreak

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேலும் உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பும் மாணவர்களுக்கும் பிற மக்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். ஒருவேளை உக்ரைனிலிருந்து வரும் மாணவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருக்கும் பட்சத்தில், அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக தடுப்பூசிகள் செலுத்தப்படும்'' என்றார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரும், இணை செயலாளருமான லாவ் அகர்வால், ``கோவிட் இரண்டாவது அலையில், நோய்த்தொற்றின் ஒட்டுமொத்த பரவல் நாள்கள் 117. ஆனால் மூன்றாவது அலையில் 42 நாள்கள் மட்டுமே நோய்த் தொற்றுப்பரவல் இருந்துள்ளது. உலகம் முழுவதும் பதிவான கோவிட் எண்ணிக்கையை ஒப்பிடும்போது இந்தியாவில் தொற்று எண்ணிக்கை 0.7% மட்டுமே பதிவாகிள்ளது.

கோவிட் -19 தடுப்பூசி
கோவிட் -19 தடுப்பூசி
AP Photo/Rafiq Maqbool

உலக அளவில் குறைந்துவரும் தொற்று எண்ணிக்கையின் சராசரி 55.7%. இதனுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் தொற்று எண்ணிக்கை 96.4% குறைந்துள்ளது. அதேபோல் கோவிட் இறப்பு எண்ணிக்கையும் 76.6% குறைந்துள்ளது. உலக நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் கோவிட் தொற்று எண்ணிக்கையும், இறப்பு எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது" என அவர் அறிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism