Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜிஎஸ்டி வரி: 66 பொருள்களின் விலை குறைகிறது!

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி வரி, ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கும் நிலையில், நேற்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சில பரிசீலனைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்தக் கூட்டத்தில், 66 பொருள்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. 

 மொத்தம் 133 பொருள்களுக்கான பரிசீலனைக் கருத்துகள் பெறப்பட்டன. அவைகுறித்து ஆலோசனை நடத்திய பின்னர், 66 பொருள்கள் மீதான வரிவிகிதங்களைக் குறைக்க முடிவுசெய்யப்பட்டது. இன்சுலின் போன்ற முக்கியமான பொருள்கள்  அவற்றில் அடக்கம்.

குறிப்பாக, சினிமாவுக்கான வரியில் மாற்றம்செய்யப்பட்டுள்ளது. முன்பு, சினிமாவுக்கு 28 சதவிகித வரி விதிக்கப்பட்டது. இது, சினிமா துறையினர் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்தக் கூட்டத்தில் ரூ.100-க்கும் அதிகம் உள்ள சினிமா டிக்கெட்டுகளுக்கு 28 சதவிகித வரியும், அதற்கும் கீழே உள்ள டிக்கெட்டுகளுக்கு 18சதவிகித வரி குறைக்கப்பட்டிருக்கிறது. 

ஜிஎஸ்டி அமல்படுத்துவதால் பொருள்களின் விலை குறையுமா இல்லையா என்பது ஜூலை 1 அன்று தெரிந்துவிடும்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement