கர்நாடகாவில் முழு அடைப்பு : போலீஸார் குவிப்பு!

கர்நாடக மாநிலத்தில், கன்னட அமைப்புகள் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்துகின்றனர். கர்நாடக மாநில விவசாயிகளின் கடன்களை ரத்துசெய்யக் கோரியும் மேகதாது பிரச்னைக்கு தீர்வு காணவும் கோலார், சிக்காபல்லாபூர், தாவண்கரே மற்றும் சித்ரதுர்கா மாவட்டங்களில் குடிநீர் பிரச்னைகளைத் தீர்க்கவும் வலியுறுத்தி, இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்துகின்றனர்.  

bangalore
 

இன்று அதிகாலை, தமிழகப் பேருந்துகள் கர்நாடக-தமிழக எல்லையில் நிறுத்திவைக்கப்பட்டன. ஆனால், சிறிது நேரத்தில் தமிழகப் பேருந்துகள் கர்நாடக மாநிலத்துக்கு வழக்கம்போல இயக்கப்பட்டன. அங்கு பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கர்நாடகா முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் சுமார் 15,000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!