Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாட்டிறைச்சித் தடைக்கு எதிராக மேகாலயா சட்டப்பேரவையில் தீர்மானம்!

மத்திய அரசு அறிவித்த மாட்டிறைச்சித் தடைக்கு எதிராக, மேகாலயா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

மாட்டிறைச்சி

நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதைத் தடை செய்து, சட்டத் திருத்தம் கொண்டுவந்தது மத்திய அரசு. விவசாயக் காரணங்களுக்காக மட்டுமே மாடுகளை விற்க, வாங்க சட்டத்தில் புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டது. இந்தத் தடை அறிவிப்பு, நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்களும் இந்தத் தடை அறிவிப்புக்கு எதிராக கண்டனங்களைப் பதிவுசெய்துவ ந்தனர். குறிப்பாக, கேரளாவில் இந்த அறிவிப்புக்கு எதிராக பல்வேறு இடங்களில் மாட்டிறைச்சி திருவிழாக்கள் நடைபெற்றன.

இந்நிலையில், இன்று மேகாலயா சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, மாட்டிறைச்சித் தடைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேகாலயாவில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசு இத்தீர்மானத்தைப் பேரவையில் நிறைவேற்றியுள்ளது.

முன்னதாக, மாட்டிறைச்சி என்பது தங்கள் உணவுப் பழக்கங்களுள் ஒன்று எனவும், அது தங்கள் பாரம்பர்யத்தோடு தொடர்புடையது என்றும் பாஜக-வைச் சேர்ந்த மேகாலயா நிர்வாகிகள் இருவர் கட்சியிலிருந்தே விலகுவதாக அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement