வெளியிடப்பட்ட நேரம்: 18:28 (12/06/2017)

கடைசி தொடர்பு:18:28 (12/06/2017)

குடியரசுத் தலைவர் வேட்பாளர்: குழு அமைத்த எதிர்க்கட்சிகள்

குடியரசுத் தலைவர் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்காக எதிர்க்கட்சிகள் சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 


குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் ஜூன் மாதத்துடன் முடிவடையவுள்ளது. இந்த நிலையில் ஜூலை 17-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆளும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு எதிராக, சக்தி வாய்ந்த பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளரை முடிவு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குலாம் நபி ஆசாத் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அந்தக் குழுவில் மல்லிகார்ஜூனா கார்கே, சீத்தாராம் யெச்சூரி, தி.மு.கவைச் சேர்ந்த எஸ்.ஆர்.பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.