Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"நீட் தேர்வை புதிதாக நடத்த வேண்டும்" - டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்!

நீட் தேர்வு

மிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் சுமார் 2,500 மருத்துவ படிப்புக்கான இடங்கள் நீட் தேர்வின் மூலம் நிரப்பப்படுகின்றன. தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அனைத்து இடங்களும் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களைக் கொண்டே இனி நிரப்பப்படும் சூழல் உருவாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள மொத்த மருத்துவ இடங்களில் 85 சதவிகிதம் நமது மாநிலத்தில் வசிக்கும் மாணவர்களுக்கும், எஞ்சிய 15 சதவிகித இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டின்படியும் வழங்கப்பட்டு வந்த நிலையில், இப்போது நீட் தேர்வின் காரணமாக, தமிழக மாணவர்களுக்கான மருத்துவ இடங்கள் பறிக்கப்படும்நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நீட் நுழைவுத்தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி, சட்டமன்றத்தில் இரண்டு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதலை மத்திய அரசு பெற்றுக் கொடுக்கவில்லை. மாநில அரசும் அதற்குரிய போதிய அழுத்தத்தைக் கொடுக்கவில்லை. அகில இந்திய அளவில் ஒரே நுழைவுத்தேர்வு என்று கூறிவிட்டு, வெவ்வேறு மாநில மொழிகளில் வெவ்வேறு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. சில மொழிகளில் வினாத்தாள் எளிமையாக இருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகம் போன்ற சில மாநிலங்களில் வினாத்தாள் கடினமாக இருந்துள்ளது. எனவே, நீட் தேர்வின் அடிப்படையில் நாடு முழுவதும் ஒரே தர வரிசை பட்டியல் தயாரித்தால் அது பாரபட்சமானதாகவே அமையும். அனைவருக்கும் சம வாய்ப்பை வழங்குவதாக இருக்காது. மத்திய அரசின் இந்தச் செயலுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தேர்வு முடிவுகளை வெளியிட இடைகாலத் தடை விதித்திருந்தது. இந்நிலையில் நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இது அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது. மருத்துவக்கல்வியில் மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது. எனவே இப்பிரச்னையில் உடனடியாக மத்திய அரசு தலையிட வேண்டும்.

ஏற்கெனவே, நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்து விட்டு, நாடுமுழுவதும் ஒரே வினாத்தாள் மூலம் மறுதேர்வை நடத்த வேண்டும். வினாத்தாள்களை வெவ்வேறு மொழிகளில் மொழியாக்கம் மட்டுமே செய்யவேண்டும். இளநிலை, முதுநிலை மற்றும் உயர்சிறப்பு மருத்துவக் கல்வி இடங்களில் மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்க, மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். நீட் நுழைவுத் தேர்வு தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இதுகுறித்து விவாதித்திட அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close