Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சோனியா காந்தி பெயரில் குறைந்த விலையில் தரமான சிமென்ட்!

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கூட்டத்தின்போது பேசிய சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, ’காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பெயரில் புதுச்சேரியில் தரமான சிமென்ட் வழங்கப்படும்’ என்று அறிவித்துள்ளார். 
 

pondicherry assembly

மேலும், ஒரு மாதத்துக்குள் குறைந்த விலையில் சிமென்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி புதுச்சேரியில் தொழிற்சாலைகளின் சுகாதாரத்தன்மை குறித்து ஆய்வு நடத்த குழு அமைக்கப்படும் என்றும், மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மூடப்படும் என்றும் அறிவித்துள்ளார். 

இதனிடையே சட்டப்பேரவை நிகழ்வின்போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தனவேல், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினார். புதுச்சேரி அரசு சிறப்பாகச் செயல்படாததால்தான் துணை நிலை ஆளுநராக இருக்கும் கிரண்பேடி தலையிடுகிறார் என்று தனவேல் தெரிவித்தார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement